31 December 2006

இவைகளுக்காய்



நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..



ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..



முதலில்யாருக்கு
கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்...



இருந்தும்..
உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

சூட மலர்ந்தது நிலா


என்னவள்சூட
மலர்ந்ததுநிலா..
அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-நாளை
மலர்வதாய்சொல்லி
மறைந்த்து..
இதைவிட சிறப்பாய்..

திரவியம் தேடு


சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..
நான் இங்கே..
என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

கொஞ்சும் கவிதை


இவைவெறும்
வார்த்தைகள்அல்ல-


என்னுள்
நீ
நடத்தியவேள்விகளில்
எரிந்துபோகமறுத்து!

நான்
மலர்ந்ததருனங்கள்?

வேண்டுதல் வேண்டாமை


உனைஎங்கு
பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை


தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரைஆக்கிரமித்து..

என்னுள் - நீ !

22 December 2006

புண்னகை பூ


நாம்
நின்றுபேசிய
இடதில்
தேன் குடிக்கவண்டுகள்
வட்டமிட்டன

நீ சிந்திய
புண்னகைபூக்களில்..